பணிச்சுமையை குறைத்த சி.சி.டி.வி., கமிஷனர் பெருமிதம்

சென்னை தண்டையார்பேட்டையில் 30 லட்சம் மதிப்பிலான 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

காவலர்களின் பணியை சிசிடிவி குறைந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்தை தான் மட்டுமே செயல்படுத்த வில்லை, முதல்வரின் ஆலோசனைப்படி அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் இந்த சிசிடிவி செயல்பாட்டை செயல்படுத்தினோம். காவலன் செயலியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *