தர்பார் திரை விமர்சனம்

‛சும்மா கிழி…’ அப்படினு ரஜினி பாடி முடிக்கும் போது, அத்தோடு படமும் கிழித்து தொங்க விடப்படும் என்பது ரசிகர்களுக்கு அப்போது தெரியவில்லை.
தீனா, துப்பாக்கி போன்ற தரமான திரைக்கதைகளை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் ஏமாற்றியதை ரஜினியை மட்டுமல்ல. அவர் ரசிகர்களையும் தான். சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் யோசிக்காமல் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
பழைய ரஜினியை பார்த்த அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்த தர்பாரை வரவேற்பர். ஆனால், நாளை ஓட்டு போடப் போகும் இளைய தலைமுறையினர், இந்த தர்பாரை பார்த்தால்…!!!

அரசியல் தர்பாருக்குள் ரஜினி நுழைவதற்கான நேரத்தை இந்த தர்பார் படம் உணர்த்தியுள்ளது. போதை கும்பலை அழிக்க புறப்படும் போலீஸ் கமிஷனராக ரஜினி. இதில் போதைகும்பல் மகனை ரஜினி கொல்கிறார். பதிலுக்கு ரஜினி மகள் கொல்லப்படுகிறார். இறுதியில் போதை கும்பல் தலைவனை ரஜினி கொல்கிறார். இது தான் கதை.
இதனிடையே நயன்தாராவின் காதல். அதை காதலா இல்லையா என்பதை ரசிகர்கள் தான் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படி புரிந்து கொள்ளலாம். ரஜினியையே கலாய்க்கும் யோகிபாபு.
படத்தில் ஆறுதலான ஒரே விஷயம் ரஜினி மகளாக நடித்த நிவேதா தாமஸ். இதற்கு மட்டும் பாராட்டலாம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு சோடை போகவில்லை. ரஜினியை இளமையாக காட்டுவதில் முனைப்பு காட்டியுள்ள மேக்கப் மேனையும் பாராட்டலாம்.

மொத்தத்தில் இந்த தர்பார், ரஜினி ரசிகர்களுக்கு அட்டகாசம்; மற்றவர்களுக்கு பரிகாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *