தர்பார் வசூலை கட்டுப்படுத்த முடியாது

லைக்கா தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடிக்க, முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் ஜனவரி 9ல் ரிலீசானது. தர்பார் பட வசூலை தகர்க்க சிலர் திட்டமிட்டூள்ளனர்.

தியேட்டரில் தர்பார் படம் பார்க்கும்போதே மொபைல் போனில் படம் பிடித்து அதை மூன்று பாகங்களாக பிரித்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர். மேலும் அத்துடன் ஒரு ஆடியோ பதிவையும் ஒருவர் பதிவு செய்துள்ளான். அதில், ‛தர்பார் படத்தை தியேட்டரில் போய் யாரும் பார்க்க கூடாது. இந்த வீடியோவை எல்லாருக்கும் பகிருங்கள்’ என, பேசியுள்ளான்.

இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து, லைக்கா தயாரிப்பு தரப்பு சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்கள் கே.ராஜன் மற்றும் டி.சிவா இருவரும் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:   ரஜினியின் தர்பார் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளை தர்பார் படம். ஆனால் இது போல வாட்ஸ் அப்பில் பரப்பும் தீவிரவாதிகளை சும்மா விடக்கூடாது. அது கொலைக்கு சமம். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அனுப்புபவர்களும், பார்ப்பவர்களையும் டிராக் செய்து வருகின்றனர். மக்கள் யாரும் ‛வாட்ஸ் அப்’பில் படத்தை பார்க்க வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *