சர்ச்சையை உருவாக்கிய தாராளபிரபு போஸ்டர்

ஹிந்து மத கடவுளை இழிவுப்படுத்தி, ‘தாராள பிரபு’ படத்தின் போஸ்டரை வெளியிட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

விந்து தானத்தை மையமாக கொண்ட, ஹிந்தியில் வெளியான படம், ‘விக்கி டோனர்’. இப்படம் தமிழில், ‘தாராள பிரபு’ என்ற பெயரில் ‘ரீ–மேக்’ செய்கின்றனர். ஹரிஷ்கல்யாண் நாயகனாக நடிக்க, தன்யா ேஹாப் நாயகியாக நடிக்கிறார். கிருஷ்ண மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிந்து மத கடவுளான பிரம்மாவை இழிவுப்படுத்தும் வகையில் போஸ்டரில், ஹரிஷ் கல்யாண் போஸ் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

தாமரை மலரில் மூன்று தலைகளுடன் அமர்ந்தபடி உள்ள ஹரிஷ்கல்யாண் கைகளில் குழந்தைகள் தவழ, கீழே ‘தாராள பிரபு’ டைட்டில் விந்து அடையாளத்துடன் இடம் பெற்றுள்ளது.

‛படத்தின் விளம்பரத்திற்காக ஹிந்து மத உணர்வாளர்களை புண்படுத்தக்கூடாது’ என, விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *