நியூஸ் 7 டிவியின் உளவுப்பார்வை

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு “உளவுப்பார்வை”  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், சமூகத்தில் மறைக்கப்பட்ட பிரச்னைகள் ஆதாரங்களுடன் ஆவணப் படுத்தப்படுகிறது. மேலும் சமூகப் பிரச்சினை, சட்ட விரோதச் செயல்கள், குற்றச் சம்பவங்கள், போன்றவைகளை முழுமையாக அலசி, தீர்வைத் தேடி பயணிக்கிறது. ஒவ்வொரு விவகாரத்தின் பின்னணியையும், கள ஆய்வு மூலமாக பாதிக்கப்பட்டோரின் கருத்துகளோடு அவற்றை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று  தீர்வு காணும் விதமாக இந்த நிகழ்ச்சி நகர்கிறது.

கீழடிக்கும் மூத்த சிவகளை ( தாமிரபரணி நாகரீகம் ), மலக் குழி மரணம் -மாற்று என்ன?; கேன்சர் கிராமம்; அழியும் ஆதி மனிதன்; தங்க குருவி; ஆட்டோ ‘தல’! ; ஜீவசமாதி – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; பனை அரசியல்; மீண்டும் திரும்புமா சென்னை 2015; குழந்தைகளை அச்சுறுத்தும் நெளி முதுகு நோய்; உப்புசூழ் நிலப்பரப்பாகி விட்ட ஈசிஆர் பிரச்சனையை அலசும், ‘மூழ்கும் ஈசிஆர்’ ;  மூக்கைப் பிடித்துக் கொள்ள வைக்கும் இன்றைய கூவம், உற்பத்தியாகும் இடத்தில் இளநீராய் இனிக்கும் இன்னொரு பக்கத்தைப் பேசும் ‘ஆறும் அரசியலும் – கூவம்’ ; ‘பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி’  என சமூகம் சார்ந்த பிரச்னைகளை பேசுவதோடு,  களத்துக்கே சென்று, ‘உளவுப் பார்வை’  செய்திக்குழு அதற்கான தீர்வைத் தேடுகிறது.

இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு ஒவ்வொரு ஞாயிறு பிற்பகல் 2:00 மணிக்கும், அன்றிரவு 9:00 மணிக்கும் ஒளி பரப்பப் படுகிறது. இந்நிகழ்ச்சியினை நியூஸ் 7 தமிழ் குற்றப் பிரிவு தலைமைச் செய்தியாளர் ந.பா.சேதுராமன் உளவுப் பார்வை குழுவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *